எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, எடப்பாடி தொகுதியில் ஈபிஎஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்த நிலையில், ஈபிஎஸ் 1,60, 730 வாக்குகளும், திமுக வேட்பாளர் சம்பத்குமார் 87, 874 வாக்குகள் பெற்றனர். இறுதியாக திமுக வேட்பாளர் சம்பத்குமார் விட 75,856 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.
1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி போட்டியிட்டார். 6 முறை எடப்பாடி தொகுதியில் பழனிசாமி போட்டியிட்டு 4 முறை வெற்றியும், 2 முறை தோல்வியும் பெற்று இருந்தார். 1991, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றியும், 2006, 1996 ஆகிய தேர்தலில் தோல்வியை தழுவி இருந்தார்.
1989-ல் எடப்பாடி தொகுதியில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 7-வது முறையாக எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு 5-வது முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி 42,022 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.
1977 முதல் அதிமுக, பாமகவே மாறி மாறி எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…