#BREAKING: நாளை அதிமுக அலுவலகம் செல்கிறார் ஈபிஎஸ்!

Default Image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை காலை செல்கிறார் எடப்பாடி பழனிசாமி..

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், நாளை காலை 10 மணியளவில், தலைமைக் கழகம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை தந்து, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

இதில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஜூலை 11ம் தேதி நடந்த மோதலை தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. ஜூலை 21-ஆம் தேதி சீல் அகற்றப்பட்டு, அதிமுக அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின், அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என கடந்த 2- ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், 72 நாட்களுக்கு பிறகு மீண்டும் நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடைசியாக எடப்பாடி பழனிசாமி ஜூன் 27-ஆம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்