இன்னும் 30 நாள்.. எந்த கொம்பனாலும் எடப்பாடியாரை தடுக்க முடியாது.! முன்னாள் அமைச்சர் சூளுரை.!
இடைக்கால பொதுச்செயலாளராக இப்போது இருக்கும் எடப்பாடியார், இன்னும் எண்ணி 30 நாளில் அதிமுகவின் பொதுச்செயலாளராக மாறுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மேடையில் கூறினார்.
அதிமுக கட்சியின் இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு பிரிவினர் மோதல் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக இருக்கிறது. இப்போதைக்கு நீதிமன்ற தீர்ப்பின் படி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்து வருகிறார்.
இதனை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதனால், அடுத்தடுத்து என்ன நடக்கும் என தமிழக அரசியல் வட்டாரம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
சேலம், எடப்பாடியில் அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அதிமுக தலைவர்கள் பேசிவந்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர்வைகை செல்வன், ‘ யார் எதிர்த்தாலும், தைரியமாக நேருக்கு நேர் நின்று போராடும் வீரன் எடபடியார். இடைக்கால பொதுச்செயலாளராக இப்போது இருக்கும் எடப்பாடியார், இன்னும் எண்ணி 30 நாளில் அதிமுகவின் பொதுச்செயலாளராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.’ என சூளுரை விடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்.