உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற ஈபிஎஸ்…! தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள்..!
சட்டப்பேரவைக்குள் இருந்து வெளியே வந்த ஈபிஎஸ் தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றுள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் பொது பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், சட்டப்பேரவைக்குள் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், பேட்டி எடுக்க முயன்றனர்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேட்டி கொடுக்காமல் சிரித்துக் கொண்டே நடந்து சென்றார். அப்போது அவர் தன்னுடைய காரில் ஏறுவதற்கு பதிலாக, உதயநிதி ஸ்டாப்களின் அவர்களின் காரில் ஏற முயன்றுள்ளார். இதனையடுத்து, அலார்ட்டான பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி, அவரது காரில் ஏறுமாறு கூறினர்.