ஓபிஎஸ்-க்கு ஈபிஎஸ் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் – புகழேந்தி
அதிமுகவை வழிநடத்தக் கூடிய அதிகாரம் படைத்தவர் ஓபிஎஸ் மட்டும் தான் என புகழேந்தி பேட்டி.
பெரியகுளத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவை வழிநடத்தக் கூடிய அதிகாரம் படைத்தவர் ஓபிஎஸ் மட்டும் தான்.
அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆணையர் அனுப்பிய கடிதத்தை ஈபிஎஸ் தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர். அரசு கடிதத்திற்கு பதில் அனுப்ப வேண்டும் என்பது தான் நடைமுறை. கடிதத்தை வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்ப இது என்ன காதல் கடிதமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு, ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்றுக்கொண்ட பின், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்.