சித்தராமையா கருத்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… இபிஎஸ் கடும் கண்டனம்!
EPS : தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இதுதொடர்பாக நீதிமன்றம் வரை இருதரப்பு ராசுகளும் சென்றும் ஒரு சுமுகமான முடிவு ஏற்படவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், போதிய நீர் வரத்து இல்லாததால், தமிழகத்துக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது.
Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை காட்டம்.!
இந்த சூழலில், கர்நாடக மாநிலம் பெங்களுருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் இருந்து யாரும் தண்ணீர் கேட்கவில்லை.
Read More – காவேரி நீரை மத்திய அரசு கூறினாலும், தமிழக அரசு கேட்டாலும் தர மாட்டோம்.! சித்தராமையா திட்டவட்டம்.!
இதனால், நாங்கள் எப்படி தண்ணீர் திறப்போம். தற்போது எங்கள் மாநிலத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, காவேரியில் இருந்து தண்ணீர் திறக்க சொல்லி தமிழக அரசு கேட்டாலும் சரி, மத்திய அரசு உத்தரவிட்டாலும் சரி, நாங்கள் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விட மாட்டோம் என கூறிய நிலையில், இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதள பக்க பதிவில், இந்திய அரசு கேட்டாலும் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கூறிய கருத்து எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் இருக்கிறது. எனவே இந்த கருத்து கடும் கண்டனத்திற்குரியது.
Read More – இனி ராணுவ வீரர்கள் வரி செலுத்த வேண்டாம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!
கோடைக்காலம் நெருங்குகின்ற இந்த வேளையில், தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய சட்ட நடவடிக்கைகளைத் துரிதமாக செயல்படுத்தி நம் மாநிலத்திற்கான நியாயமான காவிரி நீர்ப் பங்கீட்டினைப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.