இன்று முதல் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஈ.பி.எஸ்…!

இன்று முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.
வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் நாளை முதல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளார். தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள எடப்பாடி பழனிசாமி, அப்பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.