ADMK Chief secretary Edappadi Palanisamy - Minister Ma Subramanian [File Image]
கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஐ கடந்துவிட்டது. மேலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்துள்ளது. இவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்து கையிருப்பு இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை அடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்திசிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை மற்றும் மருந்து இருப்பு விவரங்களை பற்றி விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி இதுவரை 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆண்கள் 206, பெண்கள் 12, 1 திருநங்கை ஆவர். இதில் 3 பெண்கள் ஒரு திருநங்கை உட்பட இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர் . மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதில் 18பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் (எடப்பாடி பழனிசாமி) தேவையில்லாமல் மருத்துவமனைகளுக்கு சென்று பொய்யான கருத்துக்களை கூறி வருகின்றனர். Omeprazole கையிருப்பு இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், உண்மையில், 4.42 கோடி அளவில் இருப்பில் உள்ளது. அது அல்சர் போன்ற நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து.
அதே போல Fomepizole எனும் மருந்து கையிருப்பு இல்லை என கூறினார். அது ஒரு ஊசி மருந்து ஆகும். ஒன்றின் விலை 6,700 ரூபாய் ஆகும் . அதனை தமிழக அரசு போதிய அளவு வாங்கி கையிருப்பில் வைத்துள்ளது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசு தயார் . இதோ நான் கூறுகிறேனே இதுதான் வெள்ளை அறிக்கை.
சேலம் உங்கள் சொந்த மாவட்டம் தான். உங்கள் ஆட்களை அனுப்பி மருத்துவமனைகளில் எவ்வளவு மருந்து இருப்பு இருக்கிறது என விசாரணை செய்ய சொல்லுங்கள். பொய்யான தகவலை கூறி மக்களை பதட்டமான சூழ்நிலைகு உள்ளாக்கி வருகிறார். மருந்துகள் போதிய இருப்பு இல்லாததால் தான் இறப்புகள் அதிகமாகிறது என இபிஎஸ் கூறுகிறார். ஆனால் மருந்துகள் போதிய கையிருப்பு உள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பையும், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார் .
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…