தேர்தல் நடத்தும் அலுவலர் மீது இபிஎஸ் பரபரப்பு புகார்!
வாய்ஸ் நோட் பரப்புரைக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி மறுத்ததாக இபிஎஸ் தரப்பு குற்றசாட்டு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாய்ஸ் நோட் முறையில் பரப்புரை செய்ய அனுமதி மறுப்பு என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார். வாய்ஸ் நோட் பரப்புரைக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி மறுத்ததாக இபிஎஸ் தரப்பு குற்றசாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து அதிமுக ஐடி பிரிவினர் புகார் மனு அளித்தனர். முன்பதிவு செய்த உரையை செல்போன் மூலம் ஒலிபரப்புவதே வாய்ஸ் நோட் பரப்புரை என்பதாகும்.