சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமானது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு அதிமுகவை அழிக்க பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்துள்ளார். ஈபிஎஸ் எப்படி முதலமைச்சரானார், எப்படி கட்சியை அபகரிக்க துடிக்கிறார் என்பது கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும். ஈபிஎஸ் ஆணவப்போக்கிற்கு தொண்டர்கள் தக்க பதிலடி தருவார்கள் என்றும் கூறினார்.
ஈபிஎஸ் தன்னை பாதுகாத்துக் கொள்ள கட்சியை அழிக்க நினைக்கிறார் என்று குற்றசாட்டினார். இதன்பின் பேசிய அவர், திருமண நிகழ்ச்சியில் சசிகலாவை எதேச்சையாக சந்தித்தேன், சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமானது. அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. அதிமுகவில் ஒற்றுமை தேவை, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஒற்றுமை குரலை எழுப்பியுள்ளார். மேலும், திமுக செய்யும் நல்ல திட்டங்களை பாராட்டுகிறோம். பெண்களுக்கு ரூ.1000 வழங்கியதை வரவேற்கிறோம், அதே சமயத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியதை திரும்ப கொண்டு வர வேண்டுமென கேட்கிறோம் என வலியுறுத்தினார்.
இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டுவில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சந்தித்து சசிகலா பேசினார். திருமண விழாவில் நடந்த சந்திப்பில் ஒரத்தநாடு எம்எல்ஏவான வைத்திலிங்கத்துக்கு சாக்லேட்டையும் வழங்கினார் சசிகலா. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்என சசிகலா கூறி வரும் நிலையிலும், அதேபோல் ஓபிஎஸ்-யும் வலியுறுத்தி வரும் சூழலில் வைத்திலிங்கம், சசிகலா சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…