“திமுக போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்” – இபிஎஸ் விமர்சனம்!

மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க, முதல்வர் முக ஸ்டாலின் ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

MK Stalin - EPS

சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, பட்ஜெட்டுக்கு முன்னதாக ₹ குறியீட்டிற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்பதை ரூபாயின் அடையாள இலச்சினையை தமிழக அரசு மாற்றியது.

இதனை குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு கிடைத்த வரவேற்பு பற்றியும் ‘உங்களில் ஒருவன்’ என்கிற காணொளியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிருக்கிறார். இதனை எதிர்க்கட்சி தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,”மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க,ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார், “FAILURE மாடல்அரசின் விளம்பர மாடல்”உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை.

தன் பட்ஜெட் பற்றி நாளேடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆர்வத்தோடு படித்துக் காட்டும் இவர், அதே நாளேடுகளில் நாள்தோறும் வருகின்ற இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளை இதே அர்ப்பணிப்புடன் படித்துக் காண்பிப்பாரா? உலகத்திலேயே தன் கட்சியின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்களின் பதிவுகளையே, மக்கள் கருத்தாகக் கருதி புளகாங்கிதம் அடையும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான்.

தன் பட்ஜெட் பற்றி தலைமைச் செயலக ஊழியர்கள் நினைப்பது என்ன? ஆசிரியர்கள் நினைப்பது என்ன? இதர அரசு ஊழியர்கள் நினைப்பது என்ன? விவசாயிகள், தொழில் முனைவோர், உழைக்கும் மக்கள் நினைப்பது என்ன என்பதே அறியாமல்,”ரூ” போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டது என்று சினிமா வசனம் பேசுகிறார்.

பட்ஜெட் ஹிட் ஆவது என்பது அறிவிப்பதில் இல்லை. செயல்படுத்துவதில் என்பதே உண்மை. அப்படி பார்த்தால், திமுக ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான். 72 ஆண்டுகால தமிழ்நாட்டு ஆட்சிகளின் மொத்த கடனையும் 4 ஆண்டுகளில் வாங்கி, கடன் வாங்குவதில் Record Break மற்றும் Blockbuster சாதனை செய்த ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். இந்த பட்ஜெட் தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் “தி.மு.க.-வின் இறுதி பட்ஜெட்” என்பது மக்களின் கருத்து . இந்த பட்ஜெட்…, SIMPLY WASTE” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்