300 திமுக நிர்வாகிகள் அதிமுகவில் இருந்துள்ளனர்.! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.!
எடப்பாடி திமுக கவுன்சிலர் உட்பட பலர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இன்று செய்தியாளர்களை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவர் பேசுகையில், ‘ எடப்பாடியில், 12வது வார்டு திமுக கவுன்சிலர் ஆர்.ரவி அவர்களும், திமுகவை சேர்ந்த அமுதா ரவியும் திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ளனர். CPI (இந்திய கம்யூனிஸ்ட் ) முன்னாள் நகர செயலாளர் பூபதி என இதுவரையில் மொத்தமாக 300 பேர் திமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்’ என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதை கொச்சை படுத்தி பேசுவது சரியில்லை. அது கண்டிக்கத்தக்கது. ‘ எனவும், ‘ வரும் பருவமழையில் சென்னை மாநகரம் மிகவும் பாதிக்கப்படும். ஏனென்றால் வீதியெங்கும் பல்வேறு இடங்களில் பள்ளம் தோண்டி வைத்துள்ளான்.’ என குற்றம் சாட்டினார்.
மேலும் பேசுகையில், ‘ அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் நடைபெறும் எனவும், ‘ கட்சிக்கு பாதகமாக செயல்படுவோர்கள், 100 சதவீதம் கட்சியில் இணைய வாய்ப்பில்லை.’ என திட்டவட்டமாக கூறினார்.