அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அவசர ஆலோசனை…!

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தேர்தல் அறிக்கை குறித்து அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிமுக 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மேலும், வேட்பாளர்களுக்கான நேர்காணலையும் நடத்தி முடித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தேர்தல் அறிக்கை குறித்து அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.