பதவி,பதவி,பதவி “EPS – OPS மோதல்” பதவி போட்டியால் அதிமுகவில் சலசலப்பு..!!

Published by
Dinasuvadu desk

பதவி பதவி என்று அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் , ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் சண்டை முற்றி வருகிறது.

சென்னை:

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க.,வில் அமைப்பு செயலர் என்ற முக்கிய பதவி அளிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

முக்கிய பதவிகளை எதிர்பார்த்த முன்னாள்  அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நிர்வாகி களுக்கு ‘டம்மி’ பதவி வழங்கப்பட்டு உள்ளதால் அதிருப்தியில் உள்ளனர் இவர்கள் . இதனால், அதிர்ப்தியாளர்களை  இழுக்கும் முயற்சியில், TTV தினகரன் தரப்பு இறங்கி உள்ளது,இது அ.தி.மு.க., தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.,வில் பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததும், இருவரின் ஆதரவாளர்கள் இடையே கட்சி பதவிகளை பெற போட்டி நிலவியது. இதனால், நிர்வாகிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தங்களுக்கு எதிரானவர்களுக்கு முக்கிய பதவி கொடுக்க அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, முன்னாள் அமைச்சர்களுக்கு, ‘டம்மி’ பதவி வழங்கப்பட்டு உள்ளது. இது கட்சியில் கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவக்கிய போது, முன்னாள் அமைச்சர் தாமோதரன், அவருக்கு பக்க பலமாக இருந்தார்; கோவையில் பன்னீர் அணிக்கு பெரும் உதவியாக இருந்தார். அணிகள் இணைந்ததும், அவர் கட்சியில் முக்கிய பதவியை எதிர்பார்த்தார்.ஆனால், அவருக்கு முக்கிய பதவி வழங்க, அந்த மாவட்ட அமைச்சர் வேலுமணி, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதனால் தாமோதரனுக்கு விவசாய பிரிவு இணை செயலர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.அதிருப்தி அடைந்த அவர் தினகரன் அணிக்கு நேற்று முன்தினம் தாவிவிட்டார்.

அதேபோல, முன்னாள் அமைச்சர்கள், ரமணா, மூர்த்தி, சின்னையா ஆகியோருக்கு, எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் அப்துல்ரஹீம், முகமது ஜான் ஆகியோருக்கு சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், முன்னாள் மாவட்ட செயலர் சிந்துரவிச்சந்திரன் ஆகியோரும் முக்கிய பதவிகளை எதிர்பார்த்தனர்.ஆனால் வெங்கடாசலத்திற்கு ஜெ., பேரவை இணை செயலர் பதவியும், சிந்து ரவிச்சந்திரனுக்கு வர்த்தக அணி செயலர் பதவியும் வழங்கப்பட்டு உள்ளது. இது, ‘டம்மி’ பதவி என்பதால், அவர்களும் கோபத்தில் உள்ளனர்.அதே நேரத்தில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, அமைப்பு செயலர் என்ற முக்கிய பதவி அளிக்கப்பட்டதால் கட்சியில் கூடுதல் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலும் பன்னீர் செல்வம்  ஆதரவாளர்களுக்கே, ‘டம்மி’ பதவி வழங்கப்படுவதால், அவரது ஆதரவாளர்கள் அனைவரும் எடப்பாடி அணியினர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.இது, அ.தி.மு.க., தலைமைக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், முக்கிய பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க.,வி னரை , தங்கள் பக்கம் வரும்படி TTV தினகரன் கட்சியினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.இதனால் TTV அணியினரின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக அதிமுகவின் நெருங்கிய வட்டாரங்களே தெரிவிப்பதால் OPS , EPS செய்வதறியாது திணறிக் கொண்டு இருக்கின்றனர்.

DINASUVADU 

Recent Posts

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

4 hours ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

5 hours ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

6 hours ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

6 hours ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

7 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

7 hours ago