பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

nainar nagendran ajithkumar

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அஜித்குமார் உட்பட 19 பேர் பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர் தவிர, நந்தமூரி பாலகிருஷ்ணா,  ஆகியோருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பை தொடர்ந்து விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. பத்மபூஷன் விருதுகளை வென்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.  வழக்கமாக எந்த விருது வழங்கும் விழாவிற்கும் வருகை தராத அஜித்குமார் இந்த விருதை வாங்கிக்கொள்வதற்கு இன்று காலை தனது குடும்பத்துடன் டெல்லிக்கு வருகை தந்திருந்தார். வருகை தந்த அவருக்கு பத்மபூஷன் விருதையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

விருது வாங்கிய அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இருவரும் அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நயினார் நாகேந்திரன் கூறியதாவது ” அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றிருக்கும் திரு. அஜித் குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இன்று நாட்டின் உயரிய விருதைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள திரு. அஜித் குமார் அவர்கள் கலைத்துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகள் படைத்து இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்” எனவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்