அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைத்தே தீருவேன்.! தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்.!
அதிமுகவை மீண்டும் தமிழக அரசு ஆட்சி கட்டிலில் அமர வைத்தே தீருவேன்’ என அதிமுக பொன்விழா ஆண்டு குறித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஒக்டோபர் 17ஆம் தேதியன்று அதிமுக கட்சியை மறைந்த முன்னாள் மூத்தவர் எம்.ஜி.ஆர் தொடங்கி 50 வருடம் ஆக போகிறது. இதனை பொன்விழா ஆண்டாக கொண்டாட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.
இதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரமாண்டமாக கொண்டாட உள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது.
அதேபோல, சென்னையில் எம்.ஜி.ஆர் நிறுவிய சத்யா ஸ்டுடியோஸில் கொண்டாடவும் பேசப்பட்டு வருகிறதாம் விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
தற்போது இது குறித்து அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ தங்களுக்கும் தங்களுடைய வாரிசுகளுக்கும் அவர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கவில்லை என சிலர் இடம் மாறியுள்ளனர்.’ என ஓபிஎஸ்-ஐ மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, ‘ அதிமுகவை மீண்டும் தமிழக அரசு ஆட்சி கட்டிலில் அமர வைத்தே தீருவேன்’ எனவும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.