அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தால் ஏன் இந்த நிலை இன்று ஏற்பட்டு இருக்க போகிறது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக அரசு தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்று தவறான செய்தியை கூறி வருகிறது என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னையில், தண்ணீர் தேங்கி நிற்பதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்.
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தால் ஏன் இந்த நிலை இன்று ஏற்பட்டு இருக்க போகிறது. எடப்பாடி பழனிசாமி மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டுள்ள கணேசபுரம், திருவள்ளுவர் நகர் போன்ற இடங்களில், அடுத்த ஆண்டு ஒரு சொட்டு நீரும் தேங்காமல் விரைவாக வெளியேறும் வகையில் பணிகள் செய்யப்படும். மக்கள் மழைநீர் தேக்கத்தால் பாதிக்காத வகையில் நிரந்தர தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…