தி.மு.க. அரசை கண்டித்து இன்று இபிஎஸ் தலைமையில் போராட்டம்.!
மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் விஷ சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து இன்று போராட்டம்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்த உள்ளார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராய இறப்பு.
கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை ஆகியவற்றை தடுக்கத் தவறிய அரசை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு இன்று போராட்டம் நடைபெற உள்ளது.