இன்று அதிமுக அலுவலகம் செல்கிறார் ஈபிஎஸ்…!
இன்று அதிமுக அலுவலகம் செல்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்திற்கு பின் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. ஜூலை 21-ஆம் தேதி சீல் அகற்றப்பட்டு, அதிமுக அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், 72 நாட்களுக்கு பின் ஈபிஎஸ் இன்று அதிமுக அலுவலகம் செல்கிறார். எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று காலை 10 மணியளவில், தலைமைக் கழகம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை தந்து, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். கடைசியாக எடப்பாடி பழனிசாமி ஜூன் 27-ஆம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.