அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் இபிஎஸிற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓபிஎஸிற்கு அழைப்பில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
இந்தியா தலைமையில் இந்த வருடம் நடைபெறும் ஜி20 மாநாடு பற்றி கலந்தாலோசனை செய்வதற்கு இந்தியா முழுவதும் உள்ள பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விளக்கப்பட்டது. இந்த அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது.
இதில் திமுகவுக்கு அழைப்பு வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி புறப்பட்டார். அதே போல அதிமுக சார்பில் அழைப்பு எடப்பாடி பழனிசாமிக்கு வந்துள்ளது.
இதனை குறிப்பிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறுகையில் , அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்துள்ளளது. ஓபிஎஸ் (பன்னீர்செல்வதிற்கு) அழைப்பு வரவில்லை என சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் இபிஎஸிற்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு வந்துள்ளது. என ஜெயலலிதா நினைவிடத்தில் அவருக்கு மரியாதை செலுத்திய பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டதை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்காக டெல்லி புறப்பட்டார் என்பது கூடுதல் தகவல்.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…