தமிழகம்:திமுக அரசு வெள்ள நிவாரண உதவிகளை உடனே வழங்கிட வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, வாழ்வாதார உதவியாக 5,000/- ரூபாயை கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை மாநகர், சென்னை புறநகர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்து மூழ்கிய இடங்களை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மிக கன மழையினால், மாநிலத்தின் அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைகளில் இருந்தும், ஏரிகளில் இருந்தும் உபரி நீர் அப்படியே ஆறுகளில் திறந்துவிடப்படுவதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், வேளாண் நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் நீரில் மூழ்கி உள்ளதோடு, தரைப் பாலங்கள், சிறு சிறு தடுப்பணைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
நான், பொதுமக்களையும், விவசாயிகளையும் நேரடியாக சந்தித்த போது, அவர்கள் தெரிவித்த முக்கியமான கருத்துக்கள் :
இந்த திமுக அரசு, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்த திமுக அரசு செய்யத் தவறியதாக நாங்கள் எதைக் கூறினாலும், இப்போதுதான் ஆட்சிக்கு வந்ததாகக் கூறுகின்றனர். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்தான். ஏற்கெனவே, அமைச்சர்களாக இருந்தவர்கள்தான் இப்போதும் உள்ளனர்.
அம்மாவின் அரசு ஆட்சியில் இருந்தபோது, நிழல் அரசாங்கத்தை நடத்தி உடனுக்குடன் அறிக்கை வெளியிட்டவர்கள்; ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே சூப்பர் முதல்வர் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்ட பெருமைக்கு உரியவர்களாகக் காட்டிக் கொண்டவர்கள்; அம்மாவின் அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய பல தொழில் முதலீடுகளையும், திட்டங்களையும், தாங்களே 30 நாட்களுக்குள் கொண்டு வந்ததுபோல் பெருமை பேசியவர்கள்; இவர்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் நீர் வழித் தடங்களை தூர் வாராததாலும், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, அம்மாவின் அரசு மீது பழிபோட்டுத் தப்பிக்க முயல்வதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
அம்மாவின் அரசு ஆட்சி செய்தபோது இருந்த அதே திறமை வாய்ந்த அதிகாரிகள்தான் இப்போதும் பதவியில் உள்ளனர். அப்போது, இதே அதிகாரிகள் தான் மீட்புப் பணிகளில் திறம்பட ஈடுபட்டு, ஒருசில நாட்களில் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் அவர்களின் திறமையினை இந்த விடியா அரசு ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
இனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு, இயற்கைப் பேரிடர் காலங்களில் அம்மாவின் அரசு எப்படி திறம்பட செயலாற்றி, மக்களின் துயரைப் போக்கியதோ, அப்படி உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவர வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…