பாஜகவுக்கு இபிஎஸ் துரோகம் செய்துள்ளார் – டிடிவி தினகரன்

அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் இன்று அமமுக கழக மகளிரணி துணைச் செயலாளர் சண்முககுமாரி அவர்களின் இல்ல திருமண விழாவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை ஏற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். அப்போது யாருடன் கூட்டணி என்று தெரியவரும். கூட்டணி இல்லையென்றால் தேர்தல் போட்டியிடுவோம் தயாராக உள்ளோம் என்றார். மக்களை ஏமாற்றுவதுதான் திமுக ஆட்சியின் செயல்பாடாக இருக்கிறது. அமமுக, அதிமுகவுடன் இணைய வாய்ப்பில்லை.
ஜனநாயக நாட்டில் யாரு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் ஏற்றுக்கொள்வது மக்களின் கையில் தான் உள்ளது என நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். மேலும், அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார்.
பாஜகவுடன் இருந்து எல்லா பலனையும் அனுபவித்துவிட்டு தேர்தல் நேரத்தில் துரோகம் செய்துள்ளார். ஏற்கனவே, இபிஎஸ் தன்னை முதல்வர் ஆகியவர்களுக்கு துரோகம் செய்தார். இப்பொது, ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜகவுக்கும் துரோகம் செய்துள்ளார். இயற்கையாகவே துரோகம் தான் எடப்பாடி பழனிசாமியின் ஒரே குறிக்கோள் எனவும் விமர்சித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025