சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை.! இபிஎஸ் குற்றசாட்டு.!

Edappadi Palanisamy

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் என யாரும் குரல் கொடுக்கவில்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து உடல்நலன் குறித்து கேட்டறிந்தார் அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர் , திமுக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தார்.

அவர் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் போலி மதுபானம் குடித்து உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்றுள்ளனர். அப்பகுதியில் போலி மதுபானம் விற்றவர் திமுக கவுன்சிலரின் உறவினர் என்று குற்றம் சாட்டினார். மேலும், விழுப்புரம் எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிரிழந்துள்ளனர் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, 2000 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்ட்டுள்ளன. 1,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படியானால் அரசுக்கு கள்ளச்சாராய விற்பனை என்பது தெரிந்து உள்ளது. இந்த உயிரிழப்புக்கு முழு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. இதனை அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. தமிழகத்தில் கஞ்சா அதிகமாக நடமாடுகிறது.
மதுபான விற்பனையில் ஒரு பாட்டிலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி 10 சதவீத கமிஷன் வாங்குகிறார் என செய்திகள் பரவி கொண்டிருக்கிறது.

இந்த சம்பவங்கள் குறித்து, பலசமூக போராளிகள் குரல் கொடுக்கவில்லை. எந்த நடிகரும் இதுவரை குரல் கொடுக்கவில்லை. திமுக கூட்டணி கட்சியினர் கூட இதனை பற்றி பேச மறுக்கின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்