அடிப்படை உறுப்பினர்களால் இபிஎஸ் தேர்வு- அதிமுக அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு என அதிமுக அதிகாரபூர்வ அறிவிப்பு.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளர் தேர்தல், எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வெற்றி சான்றிதழ் இபிஎஸ்-யிடம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுக சட்டவிதிகளின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.