முதலமைச்சர் பெருந்தன்மையை பாராட்ட இபிஸ்க்கு மனமில்லை! மேயர் பிரியா கண்டனம்!
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள உணவுகளை சுவைத்தும், அங்கு சாப்பிட வந்தவர்களிடம் உணவின் தரம் பற்றி விசாரித்தும் ஆய்வு செய்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வரின் ஆய்வு மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சித்து இருந்தார்.
இது குறித்து அவர் கூறியிருந்ததாவது “முதலமைச்சர் ஆய்வுக்கு வருவார் என்று முன்னதாகவே அம்மா உணவகத்திற்கு தெரிவிக்கப்பட்டு அங்கு தரமாக உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. எஞ்சிய அம்மா உணவகங்களில் நேற்று நடைபெற்றதை போல் கடந்த மூன்றாண்டுகளில் எத்தனைமுறை உணவின் தரத்தை அதிகாரிகளோ, விடியா திமுக அமைச்சர்களோ சோதித்தனர் என்று முதலமைச்சர் விளக்குவாரா? ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை 19.7.2024 அன்று விடியா திமுக அரசின் முதலமைச்சர் அரங்கேற்றியுள்ளார்” என்று விமர்சித்து இருந்தார்.
2021-ல் ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு அம்மா உணவகங்களை திமுக நிர்வாகிகள் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் இடித்துத் தள்ளினர். அம்மா உணவகங்களில் பணிபுரிந்தவர்களை மூன்றில் ஒரு பங்காக குறைத்தும், அம்மா உணவகங்களை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமலும், தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு… pic.twitter.com/3KhJViqiuD
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) July 20, 2024
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சென்னை மேயர் பிரியா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” கழக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சர் அவர்களின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை!
கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார்கள்; அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை.
திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்” என கூறியுள்ளார்.
கழக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சர் அவர்களின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை!
கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில்…
— Priya (@PriyarajanDMK) July 20, 2024