தேவர் குருபூஜை : இந்த முறையும் இபிஎஸ் பசும்பொன்னிற்கு வரவில்லை.!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கடந்த வருடம் போல இந்த வருடமும் தேவர் குருபூஜைக்கு பசும்பொன்னிற்கு வராமல், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது .
வருடாவருடம் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை கொண்டாடப்படும். இந்த வருடமும் அதே போல 115ஆம் ஆண்டு தேவர் குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்த விழா அரசு விழாவாக கொண்டாப்படுவதால் அரசியல் தலைவர்கள் விழாவில் கலந்துகொள்வார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முக்கிய அமைச்சர்கள் பசும்பொன்னிற்கு வருவார்கள் என அறியப்படுகிறது.
அதே போல, அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரும் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருவார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் பசும்பொன்னிற்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்ற வருடம் போலவே இந்த வருடமும், இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார் எனவும், அதிமுக சார்பில், திண்டுக்கல் சீனிவாசன், நந்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பசும்பொன்னிற்கு சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.