திரௌபதி முர்முவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்..!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திரௌபதி முர்முவுக்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் 15வது குடியரசு தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜூலை 25-ஆம் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திரௌபதி முர்முவுக்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.