நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் இபிஎஸ் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த போது, நெடுஞ்சாலை துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கூறி திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை ஆரம்பித்த பின்னர் ஆர்.எஸ்.பாரதி வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார்.
இதன் முதற்கட்ட விசாரணையை லஞ்சஒழிப்பு துறை நடத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை மேற்கொள்ள கூடாது என இபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்தது இருந்தது. இந்த கோரிக்கை விசாரணைக்கு வந்தது.
இதனை குறிப்பிட்டு ஆஜரான அரசு வழக்கறிஞர், ‘ முதற்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை முடிந்துவிட்டதால், அடுத்தகட்ட விசாரணையும் அவர்களே நடத்தலாம்’ என தனது வாதத்தை முன்வைத்தார்.
இதனை அடுத்து தான் சென்னை உயர்நீதிமன்றம், இபிஎஸ் கோரிக்கையை நிராகரித்துள்ளது. விசாரணையை லஞ்சஒழிப்பு துறை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 26ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் அரசு தரப்பு விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…