Edappadi Palanisamy [File Image]
சென்னை : கலாநிதிமாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் இபிஎஸ்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை மக்களவை தொகுதி புரசைவாக்கம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கையில், திமுக எம்பி தயாநிதி மாறன் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
2019 தேர்தலில் வெற்றி பெற்று மத்திய சென்னை எம்பியாகவும், 2024 தேர்தலில் திமுக வேட்பாளராகவும் களமிறங்கிய தயாநிதி மாறன், கடந்த முறை வெற்றி பெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை முறையாக செலவு செய்யவில்லை என கூறி எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
இந்த பேச்சு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது கிரிமினல் அவதூறு வழக்கு ஒன்றை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் தயாநிதி மாறன். தான் முறையாக நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்துள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தன்மீது அவதூறு பரப்புகிறார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
இதனை அடுத்து, இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் 13வது நடுவர் மன்றத்தில் நடைபெற்ற போது நேரில் ஆஜராகினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. பின்னர் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் இரு தரப்பு வாதங்களையும் விசாரிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…