"நான் லொடுக்கு பாண்டிதான் , EPS ,OPS_க்கு பாடம் புகட்டி தக்க பதிலடி கொடுப்பேன்" கருணாஸ் எச்சரிக்கை..!!

Published by
Dinasuvadu desk

நான் லொடுக்கு பாண்டிதான் இந்த தமிழகத்தில் வலியவருக்கு ஒரு சட்டம் , எளியவருக்கு ஒரு சட்டம் என்றும் EPS , OPS  நடத்தும் ஆட்சிக்கு ஒருநாள் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.
Image result for கருணாஸ்
இன்று நடிகரும் , சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பத்திரிக்கையாளரிடம் பேசும் போது , MGR நூற்றாண்டு விழா வந்த போது  சாலையின் இரு ஓரங்களிலும் எவளோ பேனர் வைத்தார்கள்.மக்களுக்கும் , போக்குவரத்துக்கும் இடைஞ்சல் உண்டாவதை போல இவளோ அட்டூழியம் செய்தார்கள்.நான் கண்டித்து ஒரு வால்போஸ்டர் ஓட்டினாலே காவல்துறையை வைத்து வழக்கு பதிவு செய்கிறார்கள்.எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் நடத்தும் ஆட்சி முறைகளை நீதிபதிகள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.கண்டிப்பாக ஒருநாள் தக்க பதிலடி கொடுப்பாங்க என்றார்.
இவர்கள் ஆட்சியில் மக்களுக்கு ஒரு சட்டம் , ஆட்சியாளர்களுக்கு ஒரு சட்டம்.அனைத்து மக்களும் இவர்களையும் , அமைச்சர்களையும்  பார்த்து சிரிக்கிறார்கள். நான் லொடுக்கு பாண்டி தான் ஆனால் நான் கீழிருந்து வந்தவன் கிளையில் இருந்து போராடி ஒரு அமைப்பு மூலமாக அம்மாவின் ஒத்துழைப்பால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.நான் ஒரு போராளி ,அமைச்சர்களாக இருந்தாலும் வார்த்தைகள் முக்கியம்.இனிமேல் என்னுடைய மூக்குலத்தோர் சமுதாய இளைஞர்களின் கையை உடைப்பேன் , காலை உடைப்பேன் என்றால் அதற்க்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன் ஆனால் இவர்களின் ஆட்சியில்  வலியவருக்கு ஒரு சட்டம் , எளியவருக்கு ஒரு சட்டமாக உள்ளது என்று நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.
நடிகர் கருணாஸ் முதல்வரை அடிப்பேன் என்றும் மற்ற சமுதாயத்தை பேசியது குறித்தும் 7 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீன் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடதக்கது .
DINASUVADU 

Recent Posts

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

4 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

4 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

5 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

5 hours ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

6 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

7 hours ago