சட்டம் ஒழுங்கு சரியில்லை… கஞ்சா விற்பனை அமோகம்.! அமித்ஷாவிடம் புகார்கள் அளித்த இபிஎஸ்.!
காவேரி – கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருள் நடமாட்டம் . ஆகியவை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறியள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
இன்று காலை 11 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, அதிமுகவை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருந்தனர். காலை 11 மணிக்கு ஆரம்பித்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. பல்வேறு கோப்புகளை எடுத்து சென்று அமித்ஷாவிடம் ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘ உள்துறை அமைச்சரிடம், 2 பிரதான திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளோம். கோதாவரி -காவேரி நதி நீர் இணைப்பு திட்டம், இந்த திட்டம் நிறைவு பெற்றால், தமிழகத்திற்கு நீர் அதிகமாக கிடைக்கும். அடுத்து காவிரி நீரில் கலக்கும் மாசுகளை சுத்தம் செய்ய திட்டம். இந்த திட்டங்களை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை வைத்துள்ளோம். ‘ என கூறினார்.
மேலும் பேசுகையில், ‘ தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. போதைப்பொருள் நடமாட்ட்டம் அதிகரித்து விட்டது. கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார். இதனை சட்டமன்றத்திலும், அறிக்கையின் வாயிலாக தெரிவித்தோம், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படவிலை. இதனை மத்திய உள்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
போதைப்பொருள் நடமாட்டம் குறித்த நடவடிக்கைகளில் தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் குற்றங்கள் எல்லாம் தினமும் நடக்கிறது. எல்லா துறைகளிலும் கமிஷன் , கலெக்சன், கரப்ஷன் என்றுதான் இருக்கிறது. என நியாமான பணிகள் நடைபெற வில்லை. இது அரசியல் சந்திப்பு இல்லை.’ என்று கூறினார்.
பின்னர் ஓபிஎஸ் பற்றிய கேள்விக்கு இபிஎஸ் கூறுகையில், ‘ நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதனால் கருத்து கூற விரும்பவில்லை. ஓபிஎஸ் பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். 20 மாவட்ட தொண்டர்களை, மக்களை நான் நேரில் சந்தித்து விட்டேன்.’ என கூறிவிட்டு நகர்ந்தார் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.