சென்னை: BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சந்தேகங்கள் வலுப்பெறுகின்றன என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
கடந்த ஜூன் 5ஆம் தேதியன்று சென்னையை அடுத்த பெரம்பூரில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் 8 பேர் சரணடைந்து உள்ளனர். மேலும் சிலரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்சியின் மாநில தலைவர் தலைநகர் சென்னை அருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு பற்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் வந்து ஆம்ஸ்ட்ராங் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி பின்னர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் தங்கள் இரங்லை தெரிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று குடும்பத்தாரிடம் தனது இரங்கலை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆளும் அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், கடந்த ஒரு மாத காலத்திற்குள் நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் கழக (அதிமுக) பகுதி செயலாளர் படுகொலை செய்யப்பட்டார். தற்போது BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. அரசியல் தலைவர்கள், மக்கள், பெண்கள் என யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். இந்த கொலைக்கு பின்னர் பலர் இருப்பதாக BSP தொண்டர்கள், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.
அவர்கள் சந்தேகங்களை தீர்ப்பது அரசின் கடமை, இந்த படுகொலையின் போது கிடைத்த சிசிடிவி காட்சியை நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்தோம் . அரசு எடுத்த நடவடிக்கைக்கும் சிசிடிவி காட்சிகளுக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. அதனை பார்க்கும் போது இவர்களின் சந்தேகம் சரிதான் என தோன்றுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால் தான் நியாயம் கிடைக்கும். உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு எந்த இடத்திலும் யாருடனும் பிரச்சனை கிடையாது. இந்த கொலைக்கு பின்னால் சாதாரண ஆள் குற்றவாளி அல்ல. பின்னணியில் எதோ இருக்கிறது அதனை இந்த அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…