வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம்-தமிழக அரசு .!
புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை தவிர வெளிநாடு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னதாக நவம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தது .அது இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர்களுடனும் , மருத்துவ குழுவினருடனும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான ஆலோசனையை மேற்கொண்டார் .
அந்த வகையில் இன்று தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.அதன் படி அடுத்த மாதம் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் படி புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை தவிர வெளிநாடு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இபாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மேற்கூறிய 3 மாநிலங்களை தவிர்த்து தமிழகத்திற்கு வரும் பிற மாநில மக்கள் கண்டிப்பாக இபாஸ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது!
*கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகள் திறக்க அனுமதி!
*நோய் கட்டுப்பாடு பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.#coronavirus | #Unlock pic.twitter.com/PRUZVFW7PX
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) November 30, 2020