RainAlert: மக்களே வெளியே வர வேண்டாம்! கொட்டி தீர்க்க போகும் மழை!
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளது. இந்நிலையில், வெளியே செல்லும்பொழுது கவனமாக இருக்கவும் கொடை எடுத்துக்கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. தற்பொழுது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை அடித்து வருகிறது. அதன்படி, அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.