சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கைக்கு தடை கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது.இதற்கிடையில் புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுசூழல் வரைவு அறிக்கைக்கு தடை கோரி மீனவர் நல சங்கம் சார்பில் செல்வராஜ் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில், பிராந்திய மொழிகள் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை வெளியிடும் வரை தடை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுற்றுசூழல் வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.மேலும் இது தெடர்பாக நாளைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கினை நாளை ஒத்திவைத்துள்ளது.
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…