இந்த 3 நாட்கள் தாஜ்மஹாலுக்கு செல்ல அனுமதி இலவசம்..!
ஷாஜகானின் 368வது நினைவுநாளையொட்டி, பிப்ரவரி 17 முதல் 19 வரை தாஜ்மஹாலுக்குள் செல்ல அனைவருக்கும் அனுமதி இலவசம்
நான்காவது முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் மூன்றாவது மகன், ஷாஜகான் ஐந்தாவது முகலாய பேரரசராக ஜனவரி 1628 முதல் ஜூலை 1658 வரை ஆட்சி செய்தார். அவரது பேரரசர் காலத்தில், அவரது மனைவி மும்தாஜ் மஹால் மீதான அன்பால் கட்டப்பட்ட புகழ்பெற்ற தாஜ்மஹால் உட்பட பல நினைவுச்சின்னங்கள் கட்டப்பட்டன.
ஜனவரி 22, 1666 அன்று, அவர் தனது 74 வயதில் இறந்தார். அவர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் அடக்கம் செய்யப்பட்டார். ஷாஜகானின் 368வது நினைவுநாளையொட்டி, பிப்ரவரி 17 முதல் 19 வரை தாஜ்மஹாலுக்குள் செல்ல அனைவருக்கும் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி இலவசம்
இந்த 3 நாட்களும் ஷாஜகானின் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வரலாற்றுச் சின்னம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.