சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து கழிவு எண்ணெய் கசிந்து ஆற்றில் கசிந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த எண்ணெய் கசிவால் காட்டுக்குப்பம், சிவன் படை குப்பம், எண்ணுர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழாங்குப்பம் கிராமங்களில் மீன்பிடி படகுகள் சேதம் அடைந்தன.
இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் கசிவு தொடர்பாக தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வழக்கில் எண்ணூரில் எண்ணெய்க் கழிவால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க 8 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மீன்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
787 படகுகளுக்கு தலா பத்தாயிரம் வீதம் 78. 70 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் வாழ்வாதாரம் பாதித்த 2301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 என ரூ.2 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாழ்வாதாரம் பாதித்த மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் 6,700 குடும்பங்களுக்கு வழங்க 5 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…