எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர ஆலையில் நேற்று இரவு அமோனியா வாயு வெளியேறியது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். பதற்றம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர். பின்னர் காவல்துறை அறிவுறுத்தலின் பெயரில் பொதுமக்கள் வீடுகளுக்கு சென்றனர்.
அமோனியம் வாயு கசிவு… தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவு..!
அமோனியா வாயு கசிவுக்கு காரணமான தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமோனியா கசிவு ஏற்பட்ட எண்ணூர் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உர ஆலையில் ஆய்வு நடத்த குழு ஒன்றையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், எண்ணூர் கோரமண்டல் ஆலையால் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை விடுமுறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்படவுள்ளது.
அமோனியா வாயு கசிவுக்கு காரணமான தனியார் தொழிற்சாலை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதுஅதில், நேற்று 11.30 மணி அளவில் அமோனியா இறக்கும் பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. தற்போது அமோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…