பொறியியல் பருவ தேர்வு : நேரடியாகவே நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்
கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் நேரடியாக நடத்துவதே உகந்ததாக காணப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தனியார் பொறியியல் கல்லூரிகள் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளயஜி.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல் ராஜ் கூறுகையில்,கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் நேரடியாக நடத்துவதே உகந்ததாக காணப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் தேர்வு நடத்தினால் மாணவர்களின் திறன் கேள்விக்குறியாகும் என்று தெரிவித்துள்ளார்.