தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில், மாணவர்கள் சிலர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் கோரினர். இதையடுத்து தரவரிசை பட்டியல் 25-ந் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 28-ந் தேதி திங்கட்கிழமை வெளியாக அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…