முடிந்தது கவுன்சலிங்! பாதிக்கு மேல் காலியாக உள்ள பொறியியல் இடங்கள்!
ஆண்டுக்கு ஆண்டு பொறியியல் பட்டதாரிகள் அதிகளவில் பட்டம் பெற்று வெளியே வருவதாலும், அவர்களுக்கான சரியான வேலைவாய்ப்புகள் கிடைக்காததாலும் நாளுக்கு நாள் பொறியியல் பட்டபடிப்புகளின் மீதான மோகம் மாணவர்களிடையே குறைந்து கொண்டே வருகிறது.
வருடா வருடம் பொறியியல் பட்டபடிப்புகளுக்காக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கில் காலி இடங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே போல இந்தாண்டும் கிட்டத்தட்ட பாதி அளவு இடம் காலியாக உள்ளது.
இந்தாண்டு 1,72,940 பொறியியல் இடங்களில் 83,396 இடங்கள் தான் நிரம்பியுள்ளதாம். 52 சதவீத இடம் கவுன்சலிங் முடிந்த நிலையில் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாம்.