#Engineering- கலந்தாய்வு # எப்போது?? அமைச்சர் அறிவிப்பு

Default Image

பொறியியல்  கலந்தாய்வு  எப்போது நடைபெற உள்ளது என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்வி நிலையங்களில் அடுத்த கல்வியாண்டுக்கான ஆயத்த பணிகள் என அனைத்தும் காலதாமதமாகி உள்ளது.

 

மேலும் 2020-2021ம் கல்வியாண்டுக்கான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான காலஅட்டவணையை (ஏ.ஐ.சி.டி.இ.)என்கிற அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில்  என்ஜினீயரிங் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வை அக்டோபர் 5ந்தேதிக்குள்ளும், 2ம்கட்ட கலந்தாய்வை அக்டோபர் 15ந்தேதிக்குள்ளும் நடத்தி முடிக்கவேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

அதன்படி தமிழகத்தில் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் தான்  இதுகுறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரமானது உயர்கல்வித்துறைக்கு உள்ளது அதன்  அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா நோய் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்தும் ,அமைச்சரின் உடல்நிலை குறித்தும் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனது உடல்நிலை பற்றி தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது. நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு ரத்தஅழுத்தம் மற்றும் சர்க்கரை என எதுவும் கிடையாது. நான் தற்போது மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் ஓய்வு எடுத்துவருகிறேன் என்று தெரிவித்த அவர் இன்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருக்கின்றது இது குறித்து வருகிற 15ந்தேதி நேரடியாக வந்து அறிவிக்க உள்ளேன்  என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்