விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட பொறியியல் கல்லூரி மாணவன்!

- திருப்போருரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவன்.
- மாணவன் தற்கொலை செய்ததற்கு ராகிங் செய்தது தான் காரணமா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றன.
திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கிஷோர் என்ற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியை சேர்ந்த மாணவன் கடந்த செவ்வாய் கிழமை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்போரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவனுக்கு கல்லூரி வளாகத்தில் ராகிங் தொல்லை கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
பின்னர் கிஷோரின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதற்கு அவர்கள் செவ்வாய் கிழமை கிஷோர் உணவு அருந்தவும் கேன்டீனுக்கு வரவில்லை.இதனால் அவரது நண்பர்கள் கைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர் ஆனால் எந்த ஒரு பதிலும் இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் விடுதி அறைக்கு சென்றுள்ளனர்.அங்கு கதவை வெகு நேரம் தட்டியும் கிஷோர் எந்த ஒரு பதிலும் கூறவில்லை.இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் விடுதி பொறுப்பாளரை அழைத்து கதவை உடைத்துள்ளனர்.
அப்போது கிஷோர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.பின்னர் கோவில்பட்டியில் உள்ள மாணவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.மாணவனின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025