#Breaking: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமை செயலக அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை.!
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அவரது அறையிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிவிரைவு படையினர் பாதுகாப்பது பணியில் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதனை தொடர்ந்து, தற்போது தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.