திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சமாக ரூ.51 லட்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்.
மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி, முதலில் ரூ.20 லட்சம் பெற்ற நிலையில், மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார். பணத்துடன் காரில் தப்ப முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். 15 மணி நேர விசாரணைக்கு பின் அங்கித் திவாரியை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆஜர்படுத்தியது. லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டி எஸ் பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…