TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!
சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகினற்னர்.

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாலை முதலே இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக, TVH குழுமம் மீது எந்தவொரு பெரிய சர்ச்சைகள் அல்லது வழக்குகள் பொதுவெளியில் பேசப்படவில்லை என்றாலும், இந்த அமலாக்கத்துறை சோதனை எந்த வழக்கின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மேலும், அமலாக்கத்துறை அல்லது TVH குழுமத்தின் சார்பிலும் இந்த சோதனை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. TVH குழுமம் என்பது தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனமாகும்.
இது குடியிருப்பு வளாகங்கள், வணிக கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.