வைத்தியலிங்கம் வீட்டில் ED ரெய்டு.! 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை..,

தஞ்சையில் முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு மற்றும அவருக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறையினர் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக சோதனை செய்து வருகின்றனர்.

ED Raid on Former ADMK Minister Vaithiyalingam

சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோதனை சென்னையிலும் தொடர்ந்து வருகிறது.

கடந்த 2011 அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்சஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வைத்தியலிங்கத்தின் மூத்த மகன் V.பிரபு மீதும் இந்த வழக்கு பதியப்பட்டிருந்தது.

இதில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமைச்சர் வைத்தியலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர், இன்று காலை முதலே மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன்  அவர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கும் வைத்தியலிங்கம் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருவதால் , அவரது வீடு முன்பு ஆதரவாளர்கள், கட்சியினர் குவிந்துள்ளனர். இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்