போதைப்பொருள் விவகாரம்: இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!
Drug Case: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான நிலையில், ஜாபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஜாபர் சாதிக் உடனான தொடர்பின் அடிப்படையில் சென்னை தியாகராய நகர் பாண்டிபசாரில் உள்ள இயக்குனர் அமீரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 7 மணி முதல் சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வந்த் சோதனையை தொடர்ந்து, சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் சோதனை நடக்கிறது. இந்த முக்தார் கார்டன் இல்லத்தை சில வருடங்களுக்கு முன், இயக்குனர் அமீர் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் வீடு பூட்டியிருந்ததால், 10 நிமிடங்கள் காத்திருந்து பிறகு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.