செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்கிற்கு அமலாக்கத்துறை சம்மன்!
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், அவரது சகோதர் ஆஜராக சம்மன்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதில், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.
மேலும், ரத்தக்குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு ஓரிரு நாட்களில் இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.