உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுபோன்று மணல் குவாரி விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. 2006 முதல் 2011 காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார்.. முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
அதுமட்டுமில்லாமல், இந்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அமைச்சர் பொன்முடியும் அவரின் மகன் கெளதம சிகாமணியும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், பணமோசடி புகார்கள் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் குறிப்பாக, சென்னை, விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல், வங்கி அதிகாரிகள் அவரவழைத்து, அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரவு, செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. இதனால், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் நடந்த 13 மணி நேர சோதனையை நடந்தது.
இதன்பிறகு, அவரது இல்லத்தில் இருந்து அழைத்து சென்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறப்பட்டது. இதன்பிறகு அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து அனுப்பப்பட்டார்.
8 கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை.. இந்தியாவின் மேல்முறையீட்டை ஏற்றது கத்தார் அரசு!
இதைத் தொடர்ந்து, தற்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று அமைச்சர் பொன்முடிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப் பதுக்கியதாக, திமுக எம்.பி. கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே, இவ்வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராக கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…